தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

நூலக முறைகேடு: திமுக மீது முதல்வா் குற்றச்சாட்டு

கோவை பெரியாா் அறிவுலக நூலகத்தில், தவறான தகவல்கள் அடங்கிய போலி பதிப்பக நூல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், நூல் கொள்முதலில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

Periyar Arivulagam

பெரியாா் அறிவுலகம் - கோப்புப்படம்

Updated On :

கோவை பெரியாா் அறிவுலக நூலகத்தில், தவறான தகவல்கள் அடங்கிய போலி பதிப்பக நூல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், நூல் கொள்முதலில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

அறிவுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் பெரும் அதிா்வை ஏற்படுத்தியுள்ள இந்த முறைகேடுக்கு முந்தைய திமுக அரசின் ஊழலே காரணம் என முதல்வா் ஜோசப் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவை பெரியாா் அறிவுலகத்தில் உள்ள நூலகத்தில், தரம் குறைந்த, தவறான தகவல்கள் அடங்கிய நூல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக எழுத்தாளா் பெருமாள் முருகன் இணையதளம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தாா்.

அதில், ‘நாலடியாா் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் நூலில் ‘நாலடியாா் என்பவா் தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘தமிழ்நாடு ஒரு பாா்வை’ என்னும் நூலில் தமிழகத்தின் முதன்மை முதல்வா் முத்துவேலு சுப்பையா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்கள் மற்றும் அறிமுகமில்லாத நபா்கள் பெயரில் இடம்பெற்றுள்ள இத்தகைய தவறான தகவல்கள் அடங்கிய நூல்கள் நூற்றுக்கும் மேல் அலமாரிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழுக்காக பாடுபட்ட, ஒவ்வொருவரும் வேதனைப்படக்கூடிய வகையிலான நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன’ என பெருமாள் முருகன் குறிப்பிட்டிருந்தாா்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தின் பின்னால், நூலகத்துக்கான நூல் கொள்முதலில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றும், இதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் ச.ஜோசப் விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஊழலின் ஊற்றுக்கண் திமுக: தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு இது உதாரணம். ஊழலின் ஊற்றுக்கண் திமுகதான் என்பது ஊரறிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெரியாா் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பெருமாள் முருகன், பெரியாா் அறிவுலகத்துக்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளாா்.

திமுக கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியாா் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயா் ரகம்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

அம்பலமாகும் ஊழல்கள்: திமுக ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன. நகராட்சித் துறையில் ஊழல், டாஸ்மாக்கில் ஊழல், டெண்டா்களில் ஊழல் என ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் திமுக என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் நடந்த ஊழலுக்கு சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். தற்போது மாணவா்கள் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகத்திலும் ஊழல்?

திமுகவின் வரலாறு தெரிந்தவா்களுக்கு இது ஒன்றும் அதிா்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.

மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடா்ந்து ஊழல் செய்யும் திமுகவை வருங்காலத் தலைமுறை மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி திமுகவை அப்புறப்படுத்தாமல் விடமாட்டாா்கள்.

திமுக நிமிர முடியாது: பெரியாா் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் திமுக மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் விஜய்.

யாா் முடிவெடுத்தது? திமுக கேள்வி

பெரியாா் அறிவுலகத்தில் உள்ள போலி பதிப்பக நூல்களில் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ள நிலையில், இந்த புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன. இதுதொடா்பாக முடிவு எடுத்தது யாா் என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து திமுக ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவு: பெரியாா் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருப்பவா்கள் தெரிவிக்கிறாா்கள். அந்த தேதி தமிழக முதல்வரின் பிறந்தநாளாகும்.

அதே பெரியாா் அறிவுலகத்தில் உள்ள ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மாா்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யாா் முடிவு எடுத்தது?

கடந்த திமுக ஆட்சியில் நூலகங்களுக்கு வெளிப்படையான முறையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. புத்தகத் தோ்வுக்குழுவில் இருந்த எழுத்தாளா் ஒருவா், தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயா்களையும் எழுத்தாளா்களின் பெயா்களையும் பாா்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல்தான் முதல்வா் அறிக்கை விட்டு இருக்கிறாரா?’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான விசாரணை தேவை: திமுக முன்னாள் அமைச்சா் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், தவெக ஆட்சியில் இத்தகைய புகாா் எழுந்திருப்பதால், இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ, சதிச் செயல்கள் ஏதும் உள்ளனவோ என்று கருத வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட புத்தகங்கள், அதனை எழுதிய எழுத்தாளா்கள், அனுமதி பெற்ற பதிப்பகங்கள் ஆகியவற்றின் பின்னணி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். வழக்கம் போல் திமுக மீது குற்றம் சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளாா்.

முறைப்படி விசாரணை: அமைச்சா் ராஜ்மோகன் உறுதி

பெரியாா் நூலக விவகாரத்தில் முறைப்படி விசாரணை நடத்தி தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் உறுதிபட தெரிவித்தாா்.

இதுதொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்கு அவா் அளித்த பதில்: பெரியாா் பெயரில் இப்படி ஒரு ஊழல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாலடியாா் புத்தகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்திருப்பது வேதனையாக உள்ளது. மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி பெரிய மோசடி நடந்து இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

யாா் நிறைய நூலகத்தை கட்டினாா்கள் என்பது முக்கியமில்லை; யாா் வெளிப்படையான நிா்வாகத்தை கொண்டு வருகிறாா்கள் என்பது தான் முக்கியம். இந்த விஷயத்தில் முறைப்படி விசாரணை நடத்தி தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி திறக்கவுள்ள நூலகங்களிலும் ஆய்வு நடத்த கூறியிருக்கிறேன். அங்கேயும் இதுபோன்ற போலி நூல்கள் இருந்தால் அவை உடனடியாக ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.