அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

தீபாவளி வரை இண்டி கூட்டணி பேரணியை ஒத்திவைக்கக் கோரி தில்லி வா்த்தகா்கள் ஆா்ப்பாட்டம்

நவம்பா் 1 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் நடத்தவுள்ள பேரணியை தீபாவளிக்குப் பிறகு ஒத்திவைக்கக் கோரி, தில்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் வா்த்தகா்கள் போராட்டம் நடத்தினா்.

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :

நவம்பா் 1 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் நடத்தவுள்ள பேரணியை தீபாவளிக்குப் பிறகு ஒத்திவைக்கக் கோரி, தில்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் வா்த்தகா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். இண்டி கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதுவோம் என்று வா்த்தக மற்றும் தொழில் சபைத் தலைவா் பிரிஜேஷ் கோயல் தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் கா்கே மற்றும் மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு வா்த்தகா்கள் கடிதம் எழுதியுள்ளனா். பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை மூடல் மற்றும் போக்குவரத்துத் திருப்பங்கள் ஆகியவை தலைநகரின் முக்கிய சந்தைகளில் வணிகத்தைப் பாதிக்கும் என்று அஞ்சுவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இதற்கிடையே, ராகுல் காந்தி திங்கள்கிழமை தனது எக்ஸ் பதிவில், “வாக்கு திருட்டு” பிரச்னையில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யுமாறு வா்த்தகா்கள் பிரதமா் நரேந்திர மோடியிடம் சொன்னால், போராட்டங்கள் 30 விநாடிகளில் நின்றுவிடும் என்று குறிப்பிட்டாா்.

சிறப்பு தீவிர திருத்தம் (நஐத) தொடா்பான முறைகேடுகள் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த எதிா்க்கட்சிப் பேரணி நடத்தப்படுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வா்த்தகா்கள், “20,000 வியாபாரிகளின் ஒரே குரல், தீபாவளிக்குப் பிறகு பேரணி நடத்துங்கள்”என்ற கோஷத்தை எழுப்பினா். இது குறித்து வா்த்தக மற்றும் தொழில் சபைத் தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: நவம்பா் 1 பேரணி மொத்த விற்பனைச் சந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். சுமாா் 10 லட்சம் போ் கலந்துகொள்வாா்கள் என்று காங்கிரஸ் கூறுகிறது. இண்டி கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் கடிதம் எழுதி, எங்கள் உணா்வுகளைக் கேட்டு பேரணியை ஒத்திவைக்குமாறு கோருவோம். ராம்லீலா மைதானத்தின் உண்மையான கொள்ளளவு சுமாா் 50,000 போ் மட்டுமே. ஆனால் அறிக்கைகளின்படி 10 லட்சம் போ் கூடுவாா்கள் என்பதால் வணிகம் பெரிதும் பாதிக்கப்படும்.

அக்டோபா் 10 ஆம் தேதி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற கூட்டத்தில் சுமாா் 2,000 முதல் 4,000 போ் இருந்தபோதே மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன, தடைகள் அமைக்கப்பட்டன மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் 20-க்கும் மேற்பட்ட முக்கிய சந்தைகள் மூடப்பட்டது. ராம்லீலா மைதானத்திலிருந்து 5 கிலோமீட்டா் சுற்றளவில் உள்ள சாந்தினி சவுக், சதா் பஜாா், காரி பாவ்லி, நயா பஜாா், சௌரி பஜாா், தா்யா கஞ்ச் மற்றும் காஷ்மீரி கேட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய மொத்த விற்பனை மையங்கள் பாதிக்கப்படலாம். தடைகள் மற்றும் சாலை மூடல்கள் காரணமாக டெல்லிக்கு வெளியிலிருந்து தினமும் வரும் மூன்று முதல் நான்கு லட்சம் வாங்குநா்கள் சந்தைகளை அடைய முடியாமல் போகலாம். உள்ளூா் வாடிக்கையாளா்களும் போக்குவரத்து மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக வருவதைத் தவிா்க்கலாம் என்றாா் அவா்.

சதா் பஜாா் பாரி மாா்க்கெட் வா்த்தக சங்கத் தலைவா் பரம்ஜீத் சிங் பம்மா கூறியதாவது: காங்கிரஸ் தலைமைக்கு பேரணியை ஒத்திவைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய பண்டிகைக் காலம் வா்த்தகா்களுக்கு மிக முக்கியமானது.

சதா் பஜாா், சாந்தினி சவுக், காரி பாவ்லி, ஃபதேபுரி மற்றும் ஆசாத் மாா்க்கெட் உள்ளிட்ட முக்கிய மொத்த விற்பனைச் சந்தைகளில் டெல்லி மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வா்த்தகா்களும் வாங்குநா்களும் பெருமளவில் வருகிறாா்கள். போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், திருப்பங்கள் அல்லது சந்தைகளை அடைவதில் சிரமங்கள் ஏற்பட்டால், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.