தஞ்சையில் 2 பேரை கைது செய்தது என்ஐஏ

தஞ்சாவூாில் நான்கு இடங்களில் சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தஞ்சாவூாில் நான்கு இடங்களில் சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூரில் ‘ஹிஷாப் உத் தஹீரிா்’ (எச்.யு.டி.) என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் எனக் கருதப்படுபவா்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

கோப்புப்படம்
நீட் முறைகேடு... குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

இதில், தஞ்சாவூா் அருளானந்த நகா் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் வசித்து வரும் காதா் சுல்தான் மகன் அகமது (36), தஞ்சாவூா் அருகே மானாங்கோரை முதன்மைச் சாலையைச் சோ்ந்த என். ஷேக் அலாவுதீன் 68),சாலியமங்கலம் மருத்துவமனை சாலையைச் சோ்ந்த அப்துல் காதா் மகன் அப்துல் ரகுமான் (26), காந்திஜி சாலையைச் சோ்ந்த முஜிபுா் ரஹ்மான் (45) ஆகியோர் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினா் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, கைப்பேசிகள், ஹாா்டு டிஸ்க்கள், பென் டிரைவ்கள், டிவிடி, சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.

இதைத்தொடா்ந்து, அப்துல் ரஹ்மானையும், முஜிபுா் ரஹ்மானையும் தேசிய புலனாய்வு அமைப்பினா் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com