சேலம்: இறுதி ஊர்வலத்தில் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்!

‘பாலின சமத்துவ கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்து, பின்னால் நின்ற ஆண்கள்’
இறுதி ஊர்வலத்தில் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்
இறுதி ஊர்வலத்தில் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது உக்கம்பருத்திக்காடு. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், தங்கள் குடும்ப நிகழ்வுகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்து பெரியார் கொள்கை வழியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிராமத்தைச் சார்ந்த செல்லமுத்து என்பவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். வழக்கமாக நடைபெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து, இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

வழக்கமான இறுதி ஊர்வலத்தில் ஆண்களே முன்னின்று நடத்துவதோடு, பெண்களை சுடுகாடு வரை அனுமதிக்காமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திவிடுவார்கள். இதற்கு மாறாக செல்லமுத்துவின் இறுதி ஊர்வலத்தை அந்த கிராமத்தைச் சார்ந்த பெண்களே தலைமையேற்று நடத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்
‘நாங்கள் நலமா இல்லை’: இபிஎஸ் விமர்சனம்

இறந்தவரின் உடலைப் பெண்கள் சுமந்து முன்னே செல்ல, ஆண்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்துச் சென்றனர். உடல் தகனம் செய்யும் இடத்தில், அங்கு நடமாடும் தகன மேடை (எரிவாயு மூலம் பிணத்தை சாம்பலாக்கும் மேடை) தயார் நிலையில் வைத்திருந்தனர். பின்னர் இறுதி வணக்கம் செலுத்தி, உடலை தகனமேடையில் வைத்து எரியூட்டினர்.

எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்ற பெரியார் கொள்கைப்படி, பெண்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்களை ஊர்வலத்திற்கு தலைமை ஏற்க வைத்து, அவர்கள் பின்னால் ஆண்கள் சென்றதாக அந்த கிராமத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com