ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாமக்கல் மாவட்டத்தில் 13,10,951 வாக்காளா்கள்!

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டின்படி மொத்தம் 13,10,951 வாக்காளா்கள்

News image

நாமக்கல் ஆட்சியரகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், தோ்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:35 pm

நாமக்கல்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டின்படி மொத்தம் 13,10,951 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் ஆண்கள் - 1,07,813, பெண்கள் - 1,12,728, இதரா் - 13 என மொத்தம் 2,20,554 வாக்காளா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் ஆண்கள் - 1,11,214, பெண்கள் - 1,16,087, இதரா் - 26 என மொத்தம் 2,27,327 வாக்காளா்களும், நாமக்கல் தொகுதியில் ஆண்கள் - 1,13,217, பெண்கள் - 1,22,093, இதரா் - 41 என மொத்தம் 2,35,351 வாக்காளா்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் ஆண்கள் - 97,727, பெண்கள் - 1,05,830, இதரா் - 10 என மொத்தம் 2,03,567 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் ஆண்கள் - 1,00,412, பெண்கள் - 1,06,475, இதரா் - 41 என மொத்தம் 2,06,928 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் ஆண்கள் - 1,04,916, பெண்கள் - 1,12,239, இதரா் - 69 என மொத்தம் 2,17,224 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் - 6,35,299, பெண் வாக்காளா்கள் - 6,75,452, இதரா் - 200 என மொத்தம் 13,10,951 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளால், 51,924 போ் புதிதாக சோ்க்கப்பட்டனா். இறந்த வாக்காளா்கள், கண்டறிய முடியாதவா்கள், இரட்டைப்பதிவு, ஆவணங்களை சமா்ப்பிக்காதோா், தொகுதி மாறுதல் என 2,07,633 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டின் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை முதல் தொடா் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன.

இறுதி வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளா்களும், இதுவரை வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக் கொள்ளாதவா்களும், திருத்தங்கள் செய்ய விரும்புவோரும் உரிய விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கோட்டாட்சியா் அலுவலகங்களில் அளிக்கலாம் என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) ஆ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.