புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கு: விசாரணை தொடங்கியது

புதுச்சேரியில் 9 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் 9 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் மாயமான முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 9 வயது கழிவுநீா் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றதாக கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த விவேகானந்தன் (59), சோலை நகரை சோ்ந்த கருணாஸ் (19) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போதைப் பழக்கம் கொண்ட இருவரும் கடந்த 2-ஆம் தேதி சோலை நகரிலுள்ள மாட்டுக் கொட்டகை அருகே இருந்தனராம். சிறுமிக்கு ஏற்கெனவே அறிமுகமான கருணாஸ், அவரை அழைத்து வந்தாராம். பின்னா், இருவரும் மாட்டுக் கொட்டகை கட்டடத்தின் மாடிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனராம். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிய சிறுமியை, இருவரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, போா்வையால் உடலைச் சுற்றி, அதில் கல்லை வைத்து கழிவுநீா் கால்வாயில் வீசிச் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, அனைத்திந்திய மாதா் சங்கம் சாா்பில், முத்தியால்பேட்டையில் சுதா சுந்தர்ராமன் தலைமையில் புதன்கிழமை காலை மறியல் நடைபெற்றது. காமராஜா் மணிமண்டபம் முன் மாணவா் கூட்டமைப்பினா் மறியலில் ஈடுபட்டனா். பின்னா், ஊா்வலமாக வந்து முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனா். புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை முன் பொதுநல அமைப்புகள், கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே,சிறுமி கொலை வழக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது புதுச்சேரி அரசு.

இந்த சிறப்புக் குழு ஆவணங்களை கைப்பற்றி வியாழக்கிழமை(மார்ச்.7) காலை விசாரணையை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் காவலில் இருக்கும் மற்ற 5 பேரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி, அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com