சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: ஏராளமான மக்கள் பங்கேற்பு

சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: ஏராளமான மக்கள் பங்கேற்பு

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் இறுதி ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் இறுதி ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதன்கிழமை மாலை அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

சிறுமியின் உடல் வைத்திக்குப்பம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமி உடலை அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் அடக்கம் செய்வதற்காக அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள்ள்,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: ஏராளமான மக்கள் பங்கேற்பு
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கு: விசாரணை தொடங்கியது

சிறுமியின் உடலை ஏற்றிச் செல்லும் இறுதி ஊர்வல வாகனத்தில் அவரது உடல் அருகே புத்தகப் பை மற்றும் பொம்மைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

சிறுமி இறுதி ஊர்வலத்தை அடுத்து முத்தியால்பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டிஜிபி ஸ்ரீநிவாஸ் ஆய்வு

இதனிடையே சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட முதியவர் விவேகானந்தன் வீட்டில் டிஜிபி ஸ்ரீநிவாஸ் மற்றும் சிறப்புக் குழு தலைவர் கலைவாணன் தலைமையிலான தடய அறிவியல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.

மேலும் அந்த பகுதி முழுவதும், டிஜிபி ஸ்ரீநிவாஸ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

டிஜிபுயுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை அவசர ஆலோசனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டிஜிபி, டிஐஜி உடன் சிறுமி கொலை தொடர்பாக அவரசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com