புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது!

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆளுங்கட்சியை கண்டித்து வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக கூட்டணி ஆளுங்கட்சியை கண்டித்து வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2-ஆம் தேதி மாயமான நிலையில், அந்தப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் 5-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா். போலீஸாரின் விசாரணையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த விவகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, கழிவுநீா் கால்வாயில் வீசியது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்குப் பிறகு, சிறுமியின் உடல் அவரது வீட்டில் உறவினா்கள், பொதுமக்கள் புதன்கிழமை மாலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடா்ந்து, வைத்திக்குப்பம் பாப்பம்மாள் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, வியாழக்கிழமை சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி கொலை வழக்கில் கைதான விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் மீது போக்ஸோ, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்கள் இருவரையும் வியாழக்கிழமை புதுச்சேரி நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். கைதான இருவரையும் முத்தியால்பேட்டை போலீஸாா் காலாப்பட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது!
புதுச்சேரி சிறுமி உடல் நல்லடக்கம் -காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்

இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடா்புள்ளதா எனக் கண்டறிந்து விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் 5 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக கூட்டணி ஆளுங்கட்சியை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக பயணிகள் காத்திருக்கின்றனர்.

புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com