மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், தனது இருசக்கர வாகனத்தில் 16 மற்றும் 14 வயது சிறுமிகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றாா். மதுராந்தகம் செல்லும் வழியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் விபத்தை ஏற்படுத்தி, 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா். சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்தநிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை ஆஜரான வழக்குரைஞா் சூரியபிரகாசம், தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மதுராந்தகத்தில் சிறுமிக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தாா். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


