வாலாஜாப்பேட்டை அருகே காரில் குட்கா, பான்மசாலா கடத்தல்: 3 கார் பறிமுதல்; 4 பேர் கைது

சட்டவிரோதமாக குட்கா மற்றும் பான்மசாலா கடத்தி வந்தது தெரியவந்தது.
வாலாஜாப்பேட்டை அருகே காரில் குட்கா, பான்மசாலா கடத்தல்: 3 கார் பறிமுதல்; 4 பேர் கைது
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகே 3 காரில் கடத்திச் செல்லப்பட்ட 3 டன் குட்கா மற்றும் பான்மசாலாவை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடியில் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா அவர்களின் தலைமையில் போலீசார் சனிக்கிழமை காலை 5.30 மணியளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாலாஜாப்பேட்டை அருகே காரில் குட்கா, பான்மசாலா கடத்தல்: 3 கார் பறிமுதல்; 4 பேர் கைது
கோவையில் பிரதமா் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி!

அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி அதி வேகமாக வந்த TN.21, BZ 1227 ஹூண்டாய், TN 37, CJ 7615 மகேந்திரா, GJ 27 BE 2835 க்ரெஸ்டா ஆகிய 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் பான்மசாலா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதில்,ராஜஸ்தான் மாநிலம்,கலோரிஸ் மாவட்டம் பரத்குமார்(22), ஜோத்பூர் மாவட்டம் கல்யாணராம் (26), சுரேஷ்(25),பாலி மாவட்டம் கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 டன் எடையுள்ள குட்கா மற்றும் பான்மசாலாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com