கூலி - இளையராஜா நோட்டீஸ்!

கூலி டீசரில் தன் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கூலி - இளையராஜா நோட்டீஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கூலி டீசரில் இளையராஜா இசையில் உருவான ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை முறையாக அனுமதி வாங்காமல் அனிருத் பயன்படுத்தியிருப்பதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையாராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், ”கூலி திரைப்படத்தின் டீசரில் தங்கமகன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த ’வா வா பக்கம் வா’ பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளதாகவும் ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கூலி - இளையராஜா நோட்டீஸ்!
திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘விக்ரம் விக்ரம்’ பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே போன்று, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ படத்திலும் ’என் ஜோடி மஞ்ச குருவி’ பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பாக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்லது, டீசரிலிருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

‘வா வா பக்கம் வா’ பாடலின் உரிமையை சோனி நிறுவனமும் தங்கமகன் படத்தின் அனைத்து டிஜிட்டல் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com