தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

தீனா படத்தின் மறுவெளியீட்டில் அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து அதிர்ச்சியளித்துள்ளனர்.

News image
Updated On :1 மே 2024, 5:54 am

DIN

நடிகர்கள் அஜித் குமார், சுரேஷ் கோபி, லைலா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது தீனா. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான தீனா, இன்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படங்களில் ஒன்றாகவே நீடிக்கிறது.

இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு சில திரையரங்குகளில் இன்று மறுவெளியீடு செய்துள்ளனர்.

தீனாவைக் காண ரசிகர்கள் ஆவலாக இருந்ததால் பல திரையரங்குகளில் காலைக் காட்சிகள் ஆரம்பமாகின.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு அருகிலிருக்கும் பிரபல திரையரங்கிலும் தீனா வெளியானது. அப்போது, பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்த ரசிகர்களில் ஒருவர் பட்டாசை திரைக்கு அருகேயே பற்ற வைத்திருக்கிறார். சத்ததுடன் அது வெடித்ததால் பலரும் பயத்தில் கூச்சல் எழுப்பினர். தற்போது, இந்த விடியோ வைரலாகி வருகிறது.

முன்னதாக, இதே திரையரங்கில் லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின்போது ரசிகர்கள் இருக்கைகளைச் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.