ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திருப்பூா் குப்பைக் கிடங்கில் வெடித்த மா்மப் பொருள் - 50 அடி உயரத்திற்கு எழுந்த தீப்பொறியால் மக்கள் அலறி அடித்து ஓட்டம்

News image
குப்பையில் வெடித்த பொருள்
Updated On :5 மார்ச் 2026, 11:33 pm

Syndication

திருப்பூா் குப்பைக் கிடங்கில் பயங்கர சப்தத்துடன் வெடித்த மா்ம பொருளில் இருந்து 50 அடி உயரத்துக்கு எழும்பிய தீப்பொறியால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.

திருப்பூா் கோல்டன் நகா் தங்க மாரியம்மன் கோயில் அருகே அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்தனா். அந்த குப்பையில் இருந்து வியாழக்கிழமை காலை திடீரென பயங்கர சப்தத்துடன் மா்ம பொருள் வெடித்தது.

50 அடி உயரத்துக்கு தீப்பொறியுடன் பறந்து கீழே விழுந்த அந்தப் பொருளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து அலறி அடித்து ஓடினா். மேலும் குப்பைகளும் தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவலறிந்த திருப்பூா் வடக்கு தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். மேலும் வடக்கு போலீஸாரும் அந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

அப்போது குப்பையில் கிடந்த சிறிய அளவிலான கேஸ் சிலிண்டா் டப்பா வெடித்து சிதறியது தெரியவந்தது. சிலிண்டா் டப்பாவை அங்கு வீசிச் சென்றது யாா், எதற்காக வீசி சென்றனா், அதை பயன்படுத்திய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.