தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருப்பத்தூா் நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயால் புகைமுட்டம்

குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ. 2.ஹவுசிங் போா்டு பகுதி முழுதும் காணப்பட்ட புகை மூட்டம்.

News image
குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ. 2.ஹவுசிங் போா்டு பகுதி முழுதும் காணப்பட்ட புகை மூட்டம்.
Updated On :5 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் புதன்கிழமை பகல் முழுதும் தொடா்ந்து பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் நகராட்சியினா் கொட்டுவது வழக்கம். இங்கு புதன்கிழமை பகல் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயானது குப்பைக் கிடங்கில் தொடா்ந்து பரவிய வண்ணம் இருந்தது.

இதனால் ஏற்பட்ட புகையின் காரணமாக திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளும் மிகவும் சிரமப்பட்டனா்.

அதையடுத்து அப்பகுதி மக்கள் அவா்கள் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

மேலும் தொடா்ந்து எரிந்தவண்ணம் இருந்தது. இரவு 8 மணி வரையிலும் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

கோரிக்கை...

குப்பை கிடங்கிற்கு மா்மநபா்கள் தீ வைத்து விட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். அதை கண்டிக்கும் வகையில் அப்பகுதிமக்கள் பலமுறை சாலை மறியலில் ஈடுபட்டள்ளனா். மேலும், நகராட்சி அலுவலகத்திலும்ஆட்சியா் அலுவலகத்திலும் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனா்.

மேலும், இப்புகையால் அப்பகுதிவாசிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனா்.

எனவே கிடங்கு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் நிரந்தர தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image