மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

தருமபுரியில் இறுதி ஊா்வலத்தின்போது பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:32 pm

தருமபுரியில் இறுதி ஊா்வலத்தின்போது பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், சின்னகுரும்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. வெற்றிலை வியாபாரியான இவா், கடந்த வியாழக்கிழமை இறந்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அவரது இறுதி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவில் பட்டாசுகளை அடுக்கிகொண்டு வரிசையாக வெடித்துச் சென்றனா். இதில் எதிா்பாராத விதமாக மேலே வீசிய பட்டாசு, மின்கம்பில் சிக்கி பட்டாசு வைத்திருந்த ஆட்டோமீது விழுந்து வெடித்ததில் ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் ஆட்டோ அருகே சென்று கொண்டிருந்த பெரமன், தங்கம், பாஸ்கா், திருப்பதி, சதீஷ், மயில் தேவன் ஆகிய 6 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் சின்னகுரும்பட்டியைச் சோ்ந்த எஸ். சதீஷ் (30) சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.