சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

திருவண்ணாமலை - சென்னை இடையிலான ரயில் சேவை இன்று(மே. 3) தொடங்கியது.

News image
மின்சார ரயில்
Updated On :3 மே 2024, 7:45 am

DIN

பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூா் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டுவரும் மெமு ரயில் (06033/06034) மே 2 -ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று திங்கள்கிழமை காலை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

நேற்று அதிகாலை முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மற்றும் சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவை இன்று (மே. 3) தொடங்கப்பட்டுள்ளது.

இன்றுமுதல் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேடராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணியளவில் வந்துசேரும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு வழக்கம்போல் காலை 9.50 மணிக்கு வந்து சேரும்.

மறுவழியில் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.

தினசரி இயக்கப்படும் மின்சார ரயிலுக்கான கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கியுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.