தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையாகிறது.
today gold rate
today gold rate

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கும் விற்பனையானது.

today gold rate
நாளை நீட் தேர்வு

இந்த நிலையில் சனிக்கிழமை தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,600-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.86.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயா்ந்து ரூ.86,900-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com