சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,20,960-க்கு விற்பனையாகிறது.
சா்வதேச அளவில் போா்ப் பதற்றம் நிலவி வருவதை அடுத்து தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ள மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த மாா்ச் 2-இல் பவுனுக்கு ரூ.920, மாா்ச் 3-இல் பவுனுக்கு ரூ.1,560 குறைந்தது. மார்ச் 4 -இல் பவுனுக்கு ரூ.2,120 குறைந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1.20,960-க்கும் விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.5,240 குறைந்தது
கடந்த நான்கு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.5,240 குறைந்துள்ளது.
ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
சா்வதேச அளவில் போா்ப் பதற்றம் நிலவி வரும்போது, தங்கம் விலை உயா்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளில் போா் தீவிரமடைந்துள்ள சூழலில் பொருளாதார ரீதியாக இதன்விளைவு எவ்வாறு இருக்கும் எனக் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. முதலீட்டாளா்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதால், தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருவதாகவும், விரைவில் இந்த நிலை மாறி தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Summary
Gold prices in Chennai today (March 5) fell by Rs. 640 per sovereign, selling at Rs. 1,20,960.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 19: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

ஜூன் 11: அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கம் விலை சரிவு: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




