சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,120 குறைந்து, ரூ.1,21,600-க்கு விற்பனையாகிறது.
போா் பதற்றம் காரணமாக பஹ்ரைன், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தக பிரச்னை தலைதூக்கி உள்ளது. கடல் வழி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பல வர்த்தக நிறுவனங்கள் கூறிவருகின்றன. போர் காரணமாக பங்குச் சந்தையும் வீழ்ச்சியடைந்து வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், போர் தொடங்கிய அடுத்த நாளில் இருந்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கு விற்பனையானது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,25,200-க்கும் விற்பனையானது. மாலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ரூ.15,465-க்கும், பவுனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,23,648-க்கும் விற்பனையானது.
ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.2,120 குறைவு
இந்த நிலையில், தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,120 குறைந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200-க்கும், பவுனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்!
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 295-க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Gold prices in Chennai today (March 4) fell by Rs. 2,120 per sovereign, selling at Rs. 1,21,600.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




