விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ. 720 உயர்ந்து ரூ. 53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :10 மே 2024, 3:14 am

DIN

மே மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது

சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை ஒரு கிராம் ரூ. 6,630-க்கும், ஒரு சவரன் ரூ. 53,040-க்கும் விற்பனையானது. நேற்று (மே 9), வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 52,920-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு இன்று(மே 10) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது. அட்சய திருதியை என்பதால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் இருமுறை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ. 720 உயர்ந்து ரூ. 53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ.6,705-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.30 அதிகரித்து ரூ.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1300 அதிகரித்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியை நாளையொட்டி, நகை வாங்குவதற்கு மக்கள், காலை முதலே நகை கடைகளில் குவிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.