பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

குடவாசல் அருகே பாஜக பிரமுகா் மீது தாக்குதல் சம்பவத்தில் பாஜக மாவட்டத் தலைவர் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூா் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர்
திருவாரூா் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர்

குடவாசல் அருகே பாஜக பிரமுகா் மீது தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், இந்த சம்பவத்தில் பாஜக மாவட்டத் தலைவர் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே காவனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் (42). தொழில்பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவரான இவா் குடவாசல் அருகே ஓகை பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை(மே 8) இரவு கடையில் இருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல் மதுசூதனின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பினா்.

படுகாயமடைந்த மதுசூதனன் மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அவருடைய மனைவி ஹரிணி அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப் பதிந்து, என்ன காரணத்தால் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர்
அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தென்பட்ட தாராசுரம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற பைபா சரவணன் (24), காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (30) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜெகதீசன் என்பவர், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப்பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், மதுசூதனன் தனது வலைதளப்பக்கத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டு, அதை பகிர்ந்து வந்ததும் தெரிய வந்தது. இதன் காரணமாக, 7 பேர் அடங்கிய கும்பல் திட்டமிட்டு மதுசூதனின் மீது அரிவாளால் தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, சரவணன் மற்றும் ஜெகதீசனை கைது செய்த தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், பாஜக பிரமுகா் மீது மதுசூதனன் தாக்கப்பட்ட வழக்கில் பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கரை சனிக்கிழமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com