கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

சிலி நாட்டில் உள்ள விக்டர். எம். பிளாங்கோ தொலைநோக்கியின் மூலம் ’கடவுளின் கைகள்’ எனப்படும் வால் நட்சத்திரக் கூட்டமைப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளது.
கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!
புகைப்பட உதவி: NOIR Lab

தென் அமெரிக்க நாடான சிலியில், கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விக்டர். எம். பிளாங்கோ என்ற தொலைநோக்கியில் உள்ள உயர் தொழில்நுட்ப ‘டார்க் எனர்ஜி கேமரா’, கடவுளின் கைகள் என்றழைக்கப்படும் வால் நட்சத்திரக் கூட்டமைப்பை கடந்த வாரம் (மே 6) படம் பிடித்துள்ளது.

அந்தப் படத்தில் கடவுளின் கைகள் தூரத்து பால்வெளி மண்டலத்தை பிடிக்கப்போவது போன்ற தோற்றத்தைத் தருகிறது. ’கடவுளின் கைகள்’ என்ற பெயருள்ளதால் இதன் அமைப்பில் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக எதுவுமில்லை.

சி.ஜி.4 எனப்படும் இந்த வால் நட்சத்திரக் கூட்டமைப்பின் அரிய புகைப்படம், பிரபஞ்சம் குறித்து மேலும் ஆழமாக அறிந்துகொள்ள உதவும் என்றும் கூறப்படுகிறது.

முதன்முதலில் 1976-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வால் நட்சத்திரக் கூட்டமைப்பு, உண்மையான வால் நட்சத்திரங்களைக் கொண்டதல்ல. இவை, ஒளிரும் நீண்ட வால் நட்சத்திரத்தை போன்ற வடிவிலான, மேகத்திரள்கள் போன்ற தோற்றம் கொண்ட வாயு மற்றும் தூசுக்களால் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அருகிலுள்ள நட்சத்திர மண்டலங்களிலிருந்து வரும் கதிர்வீச்சுகளைக் கொண்டு உருவாகும் புதிய நட்சத்திரங்களைத் தனது மையங்களில் கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திர கூட்டமைப்பு, புதிய நட்சத்திரங்களின் பிறப்பிலும், நட்சத்திர மண்டலங்களின்பரிணாம வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுவதாக ஆரய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!
பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

தற்போது வெளிவந்துள்ள கடவுளின் கைகள் என்ற சி.ஜே.4 வால் நட்சத்திரக் கூட்டமைப்பின் படம், ’பப்பிஸ்’ என்ற நட்சத்திர கூட்டத்தைக் கொண்ட பால் வெளி அண்டத்தில் எடுக்கப்பட்டதாகும். அவை, 1,300 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. தூசுக்களாலான தலைப்பகுதியும், சுழலும் கைகளை ஒத்திருக்கும் வடிவம் கொண்ட சி.ஜே.4-ன் தலைப்பகுதி 1.5 ஒளியாண்டுகள் நீளம் இருப்பதாகவும், அதன் வால் பகுதி 8 ஒளியாண்டுகள் அளவில் இருப்பதாகவும் ஆரய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(ஒரு ஒளி ஆண்டு = தோராயமாக 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர்)

இந்தக் கடவுளின் கைகள் 10 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இ.எஸ்.ஓ 257-19 (பிஜிசி 21338) என்ற பெயருள்ள சுழலும் பால்வெளி மண்டலத்தை நோக்கிச் செல்வது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

வானியலாளர்கள் 1976-ம் ஆண்டு முதன்முதலாக ஐரோப்பாவில் உள்ள ஷ்மிட் (schmidt) தொலைநோக்கியில் இந்த வால் நட்சத்திரக் கூட்டமைப்பை கண்டுபிடித்தபோது அதன் மங்கலான தூசுக்கள் நிறைந்த தோற்றத்தினால், அதனை ஆராயக் கடினமாக இருந்துள்ளது.

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!
வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

ஆனால், தற்போதுள்ள ‘டார்க் எனர்ஜி கேமரா’, சிவப்பு நிறத்தில் ஒளிரும் அயனாக்க ஹைட்ரஜன் நிறைந்துள்ள அதன் வெளிப்புற விளிம்பு மற்றும் தலைப்பகுதியை சிறப்பாக படம் பிடித்துள்ளதாகவும், அதன் ஒளிரும் தலைப்பகுதி கதிர்வீச்சு மூலம் அரிக்கப்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், அதனுள்ளே சூரியன் போன்ற பல நட்சத்திரங்களை உருவாக்கும் அளவு சக்தி நிரம்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com