கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

பால்டிமோரைச் சேர்ந்த பாகிஸ்தான் - அமெரிக்கத் தொழிலதிபர் சஜித் தரார், மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நல்லவர் என்றும், ”பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பார்” என்று நம்புவதாகவும் கூறினார்.

News image
Updated On :15 மே 2024, 11:13 am

DIN

பால்டிமோரைச் சேர்ந்த பாகிஸ்தான் - அமெரிக்கத் தொழிலதிபர் சஜித் தரார், மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நல்லவர் என்றும், ”பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பார்” என்று நம்புவதாகவும் கூறினார்.

தொழிலதிபர் சஜித் தரார், பிரதமர் மோடியினைப் பாராட்டிய விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலிமைமிக்க தலைவர்; அவர், இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளார், அவர் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மீண்டும் வருவார் என்று பிரபல பாகிஸ்தான் - அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

”மோடி, ஓர் அற்புதமான தலைவர். மோடி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மற்றும் வர்த்தகத்தைத் தொடங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று தரார் கூறினார்.

அமைதியான பாகிஸ்தான், இந்தியாவுக்கும் நல்லது. இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி இருப்பார் என்று எல்லா இடங்களிலும் தகவல்கள் பெறப்படுகின்றன” என்று தரார் பதிலளித்தார்.

இந்தியாவில் 97 கோடி மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவது, ஓர் அதிசயத்தைத் தவிர வேறில்லை. இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. அங்கு மோடியின் பிரபலத்தை நான் காண்கிறேன், 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எழுச்சி ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய ஜனநாயகத்திலிருந்து மக்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதை எதிர்காலத்தில் நீங்கள் காண்பீர்கள் "என்று தரார் கூறினார்.

பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் வரிகளை அதிகரிக்க விரும்புகிறது. மின்சார செலவுகள் அதிகரித்துள்ளன. எங்களால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை "என்று அவர் கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக, அடிமட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த முயற்சியும் இல்லை. ஏற்றுமதியை அதிகரிப்பது எப்படி? பயங்கரவாதத்தை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவது என சிந்திக்க தலைவர் இல்லை, தற்போது, பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகிறது. மற்றும் அரசியல் வழிநடத்தலின்மை நிலவுகிறது. இந்த பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் எங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய சில தலைமைகளைப் பெற நாங்கள் விரும்புகிறோம்" என்று தரார் கூறினார்.

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலின்போது சஜித் தரார் பிரதமர் மோடியினைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.