
காஞ்சிபுரம் மாநகரில் சின்னக் காஞ்சிபுரத்தில் பழமையும், வரலாற்றுச் சிறப்பும்மிக்க தர்மதவர்த்தினி சமேத புண்ணியகோடிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் தலைமை சிவாச்சாரியார் கே. ஆர். காமேஸ்வர குருக்கள் தலைமையில் தொடங்கின.
இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை ஆறாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர்க் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இன்று(மே 19) மாலை 6 மணிக்கு ஆலயத்தில் தர்மவர்த்தினி அம்பாளுக்கும் புண்ணிய கோடீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை புண்ணிய கோடீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.