நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: மருந்து விற்பனை பிரதிநிதி பலி!

பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி பலியானார்.

News image
Updated On :24 மே 2024, 5:48 pm IST

தூத்துக்குடி: தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மருந்து விற்பனை பிரதிநிதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். மருந்து விற்பனை பிரதிநிதியான இவர், மருந்து விற்பனை தொடர்பாக மருத்துவரை சந்திப்பதற்காக ஜெயராஜ் சாலையில் வெள்ளிக்கிழமை மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

ஆனந்த்.

ஆனந்த்.

அப்போது மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்த ஆனந்தின் உடல் மீது பேருந்தின் பின்பக்கச் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்த் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.