/

கோவா மாநில தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு வாழ்த்து

கோவா மாநிலத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Updated On :30 மே 2024, 6:18 am

கோவா மாநிலத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"கோவா மாநில தின நல்வாழ்த்துகள்!

கோவா மக்கள் முற்போக்கான மதிப்புகள் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள். கோவா மனித வளர்ச்சிக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. தன்னுடைய தனித்துவம் வாய்ந்த கலாசாரம் மற்றும் வியப்பூட்டும் உத்வேகத்தால் அனைவரையும் தொடர்ந்து கவர்ந்து வரும் அழகான மாநிலமும் அதன் மக்களும் தொடர்ந்து செழித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.