எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை வெளியிட்ட நடிகர்! வைரல் விடியோ!

எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை நடிகர் விபுராமன் வெளியிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை வெளியிட்ட நடிகர்! வைரல் விடியோ!

கடந்த 2022 பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளது. இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

எதிர்நீச்சல் தொடர் வரும் ஜூன் 8 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை வெளியிட்ட நடிகர்! வைரல் விடியோ!
முடிவுக்கு வருகிறது மக்களின் விருப்பமான தொடர்!

இந்த தொடர் நிறைவடையவுள்ளதாக நேற்று(மே 29) தகவல் வெளியான நிலையில், எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்றும் இணையத்தில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இத்தொடரில் கதிர் பாத்திரத்தில் நடிக்கும் விபுராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இறுதிக்கட்ட காட்சியில் கதிர்" என்று பதிவிட்டு விடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவில் நடிகர் விபுராமன் நடித்துள்ள இறுதிக்கட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com