கூட்டணி வேண்டாம்: தவெக நிர்வாகிகள் விஜய்யிடம் வலியுறுத்தல்
தேர்தலில் யாருடனும் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டாம், தனித்தே போட்டியடலாம் என தவெக தலைவர் விஜய்யிடம் அந்த கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தல்


சென்னை: தேர்தலில் யாருடனும் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டாம், தனித்தே போட்டியடலாம் என தவெக தலைவர் விஜய்யிடம் அந்த கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில், கொள்கை திருவிழா என்னும் பெயரில் முக்கிய அறிவிப்புகளை அந்த கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ.3) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து பேரவைத் தொகுதிகளுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பயணத்திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ.3) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் விக்கிரவாண்டி மாநாட்டில் தேவையானது மற்றும் தேவையில்லாதவை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளார். மாநாட்டில் நிகழ்ந்த சில சிக்கல்கள் குறித்து பேசியவர்களை பாராட்டிய விஜய், வரும்காலங்களில் அவற்றை சரிசெய்வதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?
கூட்டணி வேண்டாம்
தங்கள் தொகுதியில் தலைவர் விஜய் போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய நிர்வாகிகள், வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டாம், தனித்தே போட்டியிடலாம் என வலியுறுத்தியதாகவும், கூட்டணி குறித்து பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம். எதிா்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சிப்பணியை மட்டும் பாருங்கள்
மேலும் தவெக மீதான விமா்சனங்களுக்கு தகுந்த ஆதாரத்துடன் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி, விசிக கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமலும் அரசியல் கட்சி தலைவர்கள் யாரையும் இகழ்ந்து பேசாமல் கட்சிப்பணியை மட்டும் பாருங்கள். மாநாட்டை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தந்தமைக்காக நிர்வாகிகள் முன்னிலையில் விஜய் நெகிழ்ச்சியுடன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...