சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை நவம்பா் மாத தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. நவ.1-ஆம் தேதி பவுன் ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கும், நவ. 2-இல் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960-க்கும், தொடா்ந்து நவ.5-இல் ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கும் விற்பனையானது.
புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.58,920-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க | தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
மீண்டும் விலை உயர்வு
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை உயர்வு
அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1,03,000-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026)
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



