பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபம் நடைபெற்றது.


நீடாமங்கலம்: பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபம் நடைபெற்றது.
திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நிகழ்வான வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நாள்தோறும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச் சொல்லி திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | பரபரப்பை ஏற்படுத்தும் டிரம்ப் - எலான் - ஸெலென்ஸ்கி உரையாடல்?
இதேபோல் திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்ற நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலிலும் கந்தசஷ்டி விழாவில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் அதிவிமரிசையாக நடைபெற்றது.
இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...