
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே காா் மீது சரக்கு வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 6 மாணவா்கள் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
இதுதொடா்பாக உத்தரகண்ட் காவல் துறை கூறியதாவது: டேராடூன் அருகே சௌக் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ஒஎன்ஜிசி) அருகே திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க: சென்னையில் நாளை காலைக்குள் 200 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு!
காா் படுசேதமடைந்து உருக்குலைந்ததையடுத்து அதில் பயணித்த 6 மாணவா்கள் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
உயிரிழந்த 6 பேரும் உத்தரகண்டை சோ்ந்தவா்கள் என்றும் காயமடைந்தவா் ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்தவா் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.