சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்து வரும் மழை.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்து வரும் மழை.Center-Center-Chennai

சென்னையில் இன்றிரவு முதல் மழை தொடங்கும்: பிரதீப் ஜான்!

காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் பதிவு.
Published on

சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் இன்றிரவு முதல் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 

இது தொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மென் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:

காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து வருவதால், கடலோரப் பகுதிகளைத் தவிர உள் தமிழகம், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை டெல்டா பகுதிக்கு அருகில் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. புதுச்சேரி - கடலூர் - மயிலாடுதுறை பகுதிகளில் காற்று மொத்தமாகக் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

காற்றின் குவிதல் கடலோரப் பகுதிகளைக் கடந்து, உள் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மிகவும் வலுவிழந்து, நிலப்பகுதிக்குள் நெருக்கமாக நகர்வதால், இன்று(நவ. 13) தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் இன்றிரவு முதல் ஓரிரு இடங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com