தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடி: 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.
Updated On :16 நவம்பர் 2024, 7:04 am

DIN

கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார். இவர் தனது அண்ணன் வேணுகோபால் உடன் சேர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு குறிச்சி பகுதியில் நிலம் வாங்கினார். பின்னர் அதில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தை இரண்டு பேரும் சேர்ந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில்,கடந்த ஆண்டு வேணுகோபால் நிறுவனத்தில் இருந்த போது கோவையைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர் அங்கு வந்தார். அவர் வேணுகோபாலிடம் தான் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதாகவும், இந்த இடத்தை தான் வாங்கி இருப்பதால் உடனடியாக நீங்கள் காலி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் உடனே தனது தம்பி விஜயகுமாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் அங்கு வந்து அவரின் பெயரில் அந்த இடம் இருப்பதற்கான ஆவணங்களை காட்டிய, பின்னர் முபாரக் அலி அங்கு இருந்து சென்று விட்டார்.

பின்னர் சில நாள்கள் கழித்து விஜயகுமாருக்கு செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் அந்த இடத்துக்கு தற்போதைய மார்க்கெட் விலை எவ்வளவோ அதை நீங்கள் என்னிடம் கொடுத்தால் அந்த இடத்தை உங்களுக்கே கிரயம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது 2022 ஆம் ஆண்டு பாக்கியம் என்பவரிடம் முபாரக் அலி அந்த இடத்தை வாங்கி இருப்பதாக இருந்தது. தன்னுடைய நிலம் வேறு ஒரு நபரின் பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முபாரக் அலி, பாக்கியம், சாந்தி, கௌதமன், நிஷார் அகமது ஆகியோர் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு போலி ஆவணங்களை தயாரித்து விஜயகுமாரின் நிலத்தை முபாரக் அலிக்கு விற்பனை செய்ததாக பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். இதையடுத்து மோசடி செய்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்குரைஞர் ஒருவரை தேடி வரும் போலீசார், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.