
ராஜஸ்தானில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சலும்பர் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் காலமானதாலும், 7 தொகுதிகளிலும் நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இன்று காலைமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 4 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்க: உ.பி. இடைத்தேர்தல்: பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை!
முன்னிலை நிலவரம்
ஜுன்ஜுனு, ராம்கர், தியோலி-உன்னியாரா, கின்வ்ஸார் தொகுதிகளில் பாஜகவும், சலும்பர், சோரசி தொகுதிகளில் பாரத ஆதிவாசி கட்சியும், தவுசா தொகுதியில் காங்கிரஸும் முன்னிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.