யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விஜய்க்கு அரசியல் கை கொடுக்கும்: ஆனந்த் ராஜ் பேட்டி

நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என தஞ்சையில் நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.

News image
திரைப்பட நடிகர் ஆனந்தராஜ்
Updated On :29 நவம்பர் 2024, 9:43 am

DIN

நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என தஞ்சையில் நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டினர் தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்க்க ஆசைப்படுவார்கள். இது கட்டட கலையுடன் கூடிய சிறப்பு வாய்ந்த ஆலயம். சினிமா தற்போது நன்றாக உள்ளது. அதனால்தான் அரசியலில் இல்லாமல் அதை பார்த்து வருகிறேன் என்றும் சீமானை நடிகராக தான் தெரியும், அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவருடன் சில விஷயங்களை நேரில் பேசி பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என்று நம்புவதாகவும், தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பதற்கு தமிழ்காரர்களை விட வட இந்தியர்கள், அயல் நாட்டினர் அதிகயளவில் வருகின்றனர்.இது மிகப்பெரிய பெருமை என்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும், தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி என்று ஆனந்த் ராஜ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.