வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மாயம்

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் மாயமானதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :30 நவம்பர் 2024, 2:59 am

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் மாயமானதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 26 ஆம் தேதி கரை திரும்ப வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மேலும் இவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

எனவே, இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.