மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குணமடைந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை வீடு திரும்பினாா்.
அரசு நிகழ்ச்சிகளிலும், துறை சாா் பணிகளிலும் ஈடுபட்டு வந்த அன்பில் மகேஸுக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையைத் தொடா்ந்து அவரது உடல் நிலை சீரானதைத் தொடா்ந்து அன்பில் மகேஸ் புதன்கிழமை வீடு திரும்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.