நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு!

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் ரயில் சேவை பாதிப்பு.

News image

மின்சார ரயில் (கோப்புப்படம்)

Din

Updated On :2 அக்டோபர் 2024, 11:34 am

DIN

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையேயான மின்சார ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீஞ்சூர் ரயில் அருகே சரக்கு ரயிலின் 2 பெட்டிகளுக்கு இடையே இணைப்பு கொக்கி உடைந்து சேதமடைந்ததால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கும் பணியில் ரயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ரயில்கள் புறப்பாடு தாமதமாகியுள்ளது. ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கின்றன.

சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைக் காரணமாக கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மற்றும் சூளூர்பேட்டை - சென்னை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக். 2) புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.