கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனாவுக்கு திடீர் மாரடைப்பு
நாமக்கல் வந்திருந்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, நாமக்கல்லில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக, வெள்ளிக்கிழமை ஆஜராக வந்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு காகித ஆலையின் மேலாண் இயக்குநருமான சந்தீப் சக்சேனாவுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தார்.
இதையும் படிக்க | இயற்கை விவசாயம்: இன்னும் கடக்க வேண்டிய நெடுந்தொலைவு!
இதையடுத்து உடனடியாக அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது உடலில் ரத்தக்குழாய் அடைப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வழக்கு ஒன்றிற்காக நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா திடீரென மயக்கம் அடைந்தது நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.