ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சிலிண்டர் தட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை!

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை...

News image

தலைமைச் செயலாளர் முருகானந்தம்

Updated On :12 மார்ச் 2026, 12:34 pm IST

தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் அத்தியாவசியத் துறைகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

cylinder shortage: TN Chief Secretary to hold meeting with district secretaries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.