செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

நானே கேஸ் டீலர்தான்; தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! - நயினார் நாகேந்திரன்

சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து...

News image

நயினார் நாகேந்திரன் - ANI

Updated On :10 மார்ச் 2026, 4:29 pm IST

தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,

"தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய்.

ஒருவருக்கு ஒரு சிலிண்டர் கொடுத்தபிறகு 20 நாள்களுக்குப் பின்னரே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும். கணினி தொழில்நுட்பமே அப்படித்தான் இருக்கிறது. ஏனென்றால் நான் கேஸ் டீலர். அதனால் நான் சொல்கிறேன். தட்டுப்பாடு என்பது எங்குமே இல்லை. 20 நாள்களில் உங்களுக்கு சிலிண்டர் வேண்டும் என்றால் நான் தருகிறேன். உங்களுக்கு எங்கு வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவு குறைத்ததற்கும் சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உலகப் போரால் இந்தியாவில் பொருளாதார கட்டுப்பாடோ நெருக்கடியோ இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை" என்று கூறினார்.

Summary

I am a gas dealer; there is no shortage of cylinders in Tamil Nadu: Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்