மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

கிருஷ்ணகிரி அருகே வீட்டு சிலிண்டரில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை காயமடைந்தனா்.

News image
தீ விபத்தில் எரிந்து கிடக்கும் துணிகள்
Updated On :18 அக்டோபர் 2024, 5:22 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீட்டு சிலிண்டரில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிக்கான பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டி நகரில் முருகன் (54),அவரது தந்தை அருணாசலம் (84) வசித்து வருகின்றனர். முருகன் , கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் சிறப்பு நிலை அலுவலர் (போக்குவரத்து) பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டிலிருந்து பலத்த வெடி சத்தம் கேட்டது.

அருகிலிருந்தவா்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அனைத்து கதவுகளும் உடைந்திருந்தது. மேலும் படுக்கை அறையில் இருந்த துணிகள் எரிந்து கொண்டிருப்பதை கண்டவர்கள், தண்ணீர் ஊற்றி அனைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயங்கமடைந்த முருகன் மற்றும் அவரது தந்தை அருணாசலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் சமையல் எரிவாயு கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.