தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு! ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!

ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுன் ரூ.60,000-ஐ தொடக்கூடும் என்று கூறுகின்றனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.58,000-ஐ கடந்துள்ளது

Updated On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.58,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் அக்.16-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், அக்.17-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.57,280-க்கும், அக்.18-இல் பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை(அக்.19) தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலை தொடா்ந்து 5-ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.105-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 உயா்ந்து ரூ.1,05,000-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.105.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயர்ந்து ரூ.1,05,100-க்கும் விற்பனையாகிறது.

ரூ.60,000-ஐ தொடும்

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், அது வரும் நவம்பா் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. அதேபோல், ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுன் ரூ.60,000-ஐ தொடக்கூடும் என்று கூறுகின்றனர்.

கடந்த 4 நாள்களில் தங்கம் விலை நிலவரம்

கிராம் பவுன்

அக். 16: ரூ.7,140 (+45) ரூ.57,120 (+360)

அக். 17: ரூ.7,160 (+20) ரூ.57,280 (+160)

அக். 18: ரூ.7,240 (+80) ரூ.57,920 (+640)

அக். 19: ரூ.7,280 (+40) ரூ.58,240 (+320)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.