தீபாவளி: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள்!
தீபாவளி பண்டிகையையொட்டி எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, திருச்சி, மதுரை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சை செல்வோருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தனிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து ஆந்திரம், சேலம், கும்பகோணம், திருச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாள்களுக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.