வாக்காளர் அடையாள அட்டை (கோப்புப்படம்)
வாக்காளர் அடையாள அட்டை (கோப்புப்படம்)

வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம்!

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா?
Published on

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கான முகாம் குறித்த அறிவிப்பை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ளார்.

சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சென்னையில் இன்று(அக். 24) ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

வரும் நவ. 16,17, 23,24 ஆகிய தேதிகளில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் தொடர்பான முகாம்கள் நடைபெறும்.

வரும் 29-ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 2025 ஜனவரி 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com