மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

News image
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
Updated On :25 அக்டோபர் 2024, 6:31 am

DIN

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டப்பட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு

நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர பேருந்து செங்குளம் அருகே வந்துகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்

மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நத்தம் அருகே புளிய மரத்தில் மோதி முன் பகுதி முழுவதும் சிதைந்த அரசுப் பேருந்து

நத்தம் அருகே புளிய மரத்தில் மோதி முன் பகுதி முழுவதும் சிதைந்த அரசுப் பேருந்து

இதில், பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் பயணிகளில் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீசார் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புளியமரத்தில் மோதி உருக்குலைந்து காணப்படும் அரசு நகரப் பேருந்து

புளியமரத்தில் மோதி உருக்குலைந்து காணப்படும் அரசு நகரப் பேருந்து

இதில் படுகாயம் அடைந்த 6-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.