இந்திரா தொடர் நடிகைக்கு திருமணம்!

இந்திரா தொடரில் நடித்த மேனகா பிரியாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்திரா தொடர் நடிகைக்கு திருமணம்!
Published on
Updated on
1 min read

இந்திரா தொடரில் நடித்த மேனகா பிரியாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலத் தொடர் இந்திரா. இத்தொடரில் ஃபெளசில் ஹிதயாத் நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக அக்‌ஷய் கமலும் நடித்திருந்தனர்.

இந்திரா - காவியா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்திரா தொடரின் கதை. 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஒளிபரப்பாகிவந்த இத்தொடர் 536 எபிசோடுகளுடன் அண்மையில் நிறைவுற்றது.

இந்திரா தொடர் நடிகைக்கு திருமணம்!
இறுதிக்கட்டத்தில் பாக்கியலட்சுமி தொடர்!

இந்த நிலையில், இந்தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்த மேனகா பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை மேனகா பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவருக்கு முன்னதாக விஷ்ணு விக்னேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com