சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இறுதிக்கட்டத்தில் பாக்கியலட்சுமி தொடர்!

பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

serial

பாக்கியலட்சுமி தொடரின் முன்னோட்டக் காட்சி. - யூடியூப்

Published On :

பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இத்தொடர்களே அதிக டிஆர்பி புள்ளிகளையும் பெற்று வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடர் குடும்ப தலைவிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.

கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.

பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

தற்போதைய கதையில், பாக்கியலட்சுமியின் மாமனார் ராமமூர்த்தி இறந்துபோவதுபோல கதைக்களம் அமைந்துள்ளது. அதற்கான முன்னோட்டக் காட்சியும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இத்தொடர் ஒரு சில மாதங்களில் நிறைவடையவுள்ளதாகவும், இறுதிக்கட்ட காட்சிகள் கூடிய விரைவில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ளத் தகவல், இத்தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.