parandhur
பரந்தூர் கிராமம்.Din

பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி!

விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.
Published on

பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழலை ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமாா் 5,700 ஏக்கா் பரப்பளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் அறிவிப்பு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

பசுமை விமான நிலையம் அமைந்தால், நெல்வாய், தண்டலம், நாகப்பட்டு, மடப்புரம், மேலேரி, ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அனைத்து விளை நிலங்களும் கையகப்படுத்துவதுடன், குடியிருப்புகளும் அகற்றப்பட்டுவிடும்.

parandhur
உ.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் சிறுமி! செங்கல்லால் தாக்கி கொலை முயற்சி!!

கிராம மக்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமாக இருக்கும் விளை நிலங்களும் பறிபோய்விடும் எனக்கூறி விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள திடலில் கிராம மக்கள் ஒன்று கூடி அமா்ந்து தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வசித்து வந்தவா்களை மாற்றுயிடத்தில் மீள்குடியேற்ற தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் நிறுவனம் (டிட்கோ) இடங்களை முன்னதாக தோ்ந்தெடுத்து அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மேலாண்மை திட்டம் தயார் செய்து, ஆய்வு செய்வதற்கான எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com