அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு: லஞ்ச ஒழிப்புத் துறை

கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் விடப்பட்ட டெண்டரில் விதிமீறல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு
Published on

சென்னை: கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் விடப்பட்ட டெண்டரில் விதிமீறல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2018, 2019 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது.சாலைகளை சீரமைக்க ரூ.300 கோடியும்,மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.290 கோடி மதிப்பிலும் டெண்டர்கள் விடப்பட்டன.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பை கலந்த ஜெகன் மோகன் அரசு! சந்திரபாபு நாயுடு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி
தண்டனைக் கொட்டடியா, தஞ்சை சரசுவதி மகால் நூலகம்? முதல்வரே நேரில் உறுதியளித்தும் தள்ளாட்டம்!

அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அரசு பொறியாளர்கள் டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடத்தியும், டெண்டர் விடப்படும் ஒப்பந்ததாரர்கள் நியமிப்பதிலும் முறைகேடாக செயல்பட்டு ரூ.26.61 கோடி முறைகேடு செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தது.

இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது, 2018,2019 ஆம் ஆண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் விடப்பட்ட டெண்டரில் விதிமீறல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய ஒவ்வொரு பொறியாளரும் எந்தெந்த வகையில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னசாமி, செயற்பொறியாளர் சரவணமூர்த்தி, பெரியசாமி,

சின்னதுரை, நார்ச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமாரன், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி என 10 அரசு அதிகாரிகள் மற்றும் அப்போதைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது வழக்குப் பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com